"என்னடா பண்றீங்க" - உயிரோடு விளையாடும் இளைஞர்கள்.. பதற வைக்கும் வீடியோ
ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்
கிருஷ்ணகிரியில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இந்நிலையில் “குறுக்க இந்த கவுசிக் வந்த” என்ற டைலாக் போல சில இளைஞர்கள் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களில் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கு இடையூறாக ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை பிடித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
