Aathiparasakthi | என்ன லைனா வந்துக்கிட்டே இருக்கு.. செவ்வாடையோடு ஆதிபராசக்தியை நோக்கி பெரும் படை
என்ன லைனா வந்துக்கிட்டே இருக்கு.. செவ்வாடையோடு ஆதிபராசக்தியை நோக்கி பெரும் படை
நசரத்பேட்டை ஆதிபராசக்தி கோவிலில் 2 ஆயிரம் பெண்கள் பால்குடம் ஊர்வலம் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலில், 33-ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் வெகு விமரிசயைாக நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் செவ்வாடை அணிந்து, தலையில் பால்குடங்களை சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். விநாயகர், சிவன்-பார்வதி உள்ளிட்ட 6 தெய்வங்களின் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. மேள, தாளங்கள் முழங்க நடைபெற்ற விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
