West Bengal | Voterlist | 5 லட்சம் பேர் அதிரடி நீக்கம் - வெளியான இறுதி வாக்காளர் பட்டியல்
5 லட்சம் பேர் அதிரடி நீக்கம் - வெளியான இறுதி வாக்காளர் பட்டியல்
தமிழ்நாடு, கேரளாவைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்திலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நிறைவடைந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கு வங்கத்தில் மொத்தம் 7 கோடியே 4 லட்சத்து 59 ஆயிரத்து 284 வாக்காளர்கள் உள்ளனர். (card-2) இதில், ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 60 லட்சம் பேரும், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 44 லட்சம் பேரும், மூன்றாம் பாலினத்தவர் ஆயிரத்து 382 பேரும் இடம் பெற்றுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் வெளியான வரைவு பட்டியலை விட, தற்போது மேலும் 5 லட்சத்து 46 ஆயிரம் வாக்காளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். சுமார் 58 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு வராத நிலையில், இந்த இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
