உணவு டெலிவரி ஊழியர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய மேற்கு வங்க போலீசார்

x

மேற்குவங்க மாநிலத்தில், உணவு டெலிவரி ஊழியர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து நடந்த போராட்டத்தில் போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியதால் பரபரப்பு நிலவியது.

மேற்குவங்க மாநிலம், வடக்கு 24 பர்கனாஸ் North 24 Parganas மாவட்டம், சால்ட் லேக் Salt Lake பகுதியில்

வேகமாக வந்த கார் ஒன்று, மற்ற வாகனங்கள் மீது மோதியது. இதில் கார் தீப்பிடித்து எரிந்ததில்

உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில் போலீசாரின் அலட்சியத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர்.

இதனிடையே, விபத்தில் ஒருவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்