பிரியாணி கடைக்கு இரும்பு ராடுடன் சென்று மிரட்டல் | வெளியான அதிர்ச்சி CCTV
பெருங்களத்தூர் அருகே நெடுங்குன்றத்தில் பிரியாணி கடையில், இரும்பு ராடுடன் சென்று மிரட்டிய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். பிரியாணி சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்றது குறித்து கடையின் உரிமையாளர் போலீஸில் புகார் அளித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், கடைக்கு இரும்பு ராடுடன் வந்து தகராறில் ஈடுபட்டதுடன், பொருட்களையும் அடித்து உடைத்துள்ளனர். தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Next Story
