Tiruppur | Pigeon | புறாவை பிடிக்க சென்றதால் `மரணத்தின் விளிம்பை’ தொட்ட இருவர்
புறாவை பிடிக்க சென்றதால் `மரணத்தின் விளிம்பை’ தொட்ட இருவர்
புறா பிடிக்கச்சென்று கிணற்றில் தவறி விழுந்த இருவர் மீட்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கிணற்றில் புறா பிடிக்கச் சென்று கிணற்றில் தவறி விழுந்த இருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கொசவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி, மது போதையில் கொசவம்பாளையம் சாலையில் உள்ள கிணற்றில் புறா பிடிக்க சென்ற போது, நீரில் தவறி விழுந்து நீச்சல் தெரியாமல் தத்தளித்துள்ளார். அப்போது அவருடன் வந்த அதே பகுதியை சேர்ந்த தாமோதரன் அவரை காப்பாற்ற கிணற்றில் விழுந்த நிலையில், அவரும் வெளியே வர முடியாமல் கிணற்றில் தத்தளித்துள்ளார். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.
Next Story
