Well | Fire | திகுதிகுவென பற்றி எரியும் கிணற்று நீர் - நம்பவே முடியாத பயங்கரம்.. பீதியில் மக்கள்
கிணற்று நீரில் பெட்ரோல் கலப்பா? - தீ பற்றி எரிவதால் அதிர்ச்சி
கன்னியாகுமரியில் கிணற்று தண்ணீரில் நெருப்பு எரிவதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதி கிணறுகளிலிருந்து இறைக்கும் தண்ணீர் கொளுந்து விட்டு எரிவதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறை மற்றும் இந்தியன் ஆயில் கம்பெனி அதிகாரிகள், நேரடியாக ஆய்வு செய்தனர். மாவட்ட அரசு அதிகாரிகள் சம்பவம் நடந்த இடங்களுக்கு அருகே உள்ள பெட்ரோல் பங்குகளில், கசிவுகள் உள்ளதா என்று ஆய்வு செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Next Story
