போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே களைகட்டிய சரக்கு விற்பனை | வெளியான அதிர்ச்சி வீடியோ
சேலத்தில் காவல்நிலையம் அருகிலேயே 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டையாம்பட்டியில் உள்ள காவல்நிலையத்திற்கு 100 மீட்டர் தொலைவிலேயே இச்சம்பவம் நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையினருக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
