Weather Report | TN Rain | ஆட்டத்தை தொடங்கிய மழை - இந்த மாவட்டங்கள் தான் டார்கெட்..
வடகிழக்கு பருவமழை இன்று துவங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் விலகுவதாகவும், வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு உள்பட தென் இந்தியாவில் துவங்க சாதகமான சூழல் காணப்படுகிறது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதுஇன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு,சென்னை, உள்ளிட்ட 22 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மேலும், சிவகங்கை,மதுரை,நெல்லை, தென்காசி உள்ளிட்ட இடங்களில் கன முதல் மிக கனமழையும்,தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
