ஹெல்மெட் - யாருக்கெல்லாம் கட்டாயம் ?

இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் பயணிப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது
ஹெல்மெட் - யாருக்கெல்லாம் கட்டாயம் ?
Published on

இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் பயணிப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. 2015ல் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்புக்கு பின், தமிழ்நாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. மோட்டார் வாகனச்சட்டம் 1988ன் படி இந்த விதி அமலுக்கு வருவதாக தமிழக அரசின் அன்றைய செய்தி குறிப்பு கூறியது.

அந்த சட்டம் என்ன சொல்கிறது? மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின் 129வது பிரிவின் படி, அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும், பின் இருக்கையில் பயணிப்பவர்களும், ISI முத்திரை பெற்ற தலைக்கவசம் அணிவது கட்டாயம். சீக்கியர்களுக்கு விதிவிலக்கு. இது தவிர தேவையான விதிவிலக்குகளை அந்தந்த மாநில அரசு வழங்கலாம்.

தமிழக அரசு யாருக்கெல்லாம் விலக்களித்துள்ளது? 2007ல் தமிழக அரசு கொண்டுவந்த விதிகளின் படி:

* தலைப்பாகை அணியும் ‘மெய்வழிச்சாலை’ பிரிவை சேர்ந்தவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் இல்லை

* பின் இருக்கையில் பயணம் செய்யும் பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் இல்லை (ஆனால் வாகனம் ஓட்டும் பெண்களுக்கு கட்டாயம்)

* பின் இருக்கையில் பயணம் செய்யும் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் இல்லை.

தற்போது நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன திருத்தச்சட்டம் நிறைவேறினால், 4 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே விலக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com