``மூக்கு, காதுல போட்டுட்டு வந்தா கொடுக்க மாட்டோம்’’ அமைச்சர் கலகல பேச்சு

x

"நகை அணிந்து வந்தால் உரிமைத் தொகை இல்லை"

காது, கழுத்தில் நகை அணிந்து வந்தால் எப்படி மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என பெண்களிடம் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் கேலியாக பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முள்ளிச் சேவல் பகுதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார். அப்போது தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என பெண்கள் சிலர் குற்றம் சாட்டிய நிலையில், அவர்களிடம் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் சகஜமாக உரையாடினார்.


Next Story

மேலும் செய்திகள்