Farmers warned || "உயிரை மாய்த்துக் கொள்வோம்" - விவசாயிகள் எச்சரிக்கை
IDPL எண்ணெய் குழாய் திட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் உயிரை மாய்த்து கொள்வோம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி, விவசாயி நிலங்களில் IDPL குழாய் பதிக்கப்படுவதால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். வீடு கட்டுதல், வங்கிக்கடன் எதுவும் கிடைப்பதில்லை என தெரிவித்த அவர், அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லையெனில், தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதாக எச்சரித்துள்ளார்.
Next Story
