``பேசி பார்த்தாச்சு.. சொல்லி பார்த்தாச்சு''.. ஜி.கே.மணி வேதனை
பாமக பொறுப்பு விவகாரத்தில் ராமதாஸ், அன்புமணியின் நடவடிக்கை, தொண்டர்களிடையே குழப்பத்தை உண்டாக்குமே தவிர, அது வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்காது என பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி வேதனை தெரிவித்துள்ளார். தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாமகவில் இறுதிவரை ராமதாஸுடன் பயணிக்க விரும்பவதாகவும், தற்போது நிலவும் குழப்பத்தால் அடிமட்ட தொண்டர்கள் முதல் அனைவரும் குழம்பிப்போய் உள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தார். மேலும் கட்சிக்குழப்பம் குறித்து இருதலைவர்களிடமும் எடுத்துரைக்கப்பட்ட நிலையில், முடிவுகளை அவர்கள்தான் எடுக்க வேண்டுமெனவும், இந்த பிரச்னைக்கு மற்ற எந்தக்கட்சியையும் குறை சொல்லக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
Next Story