

நூல் விலையைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நூலின் வரலாறு காணாத விலை உயர்வால் சுமார் 35 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், நூலிற்கு மானியம் வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும் என்றும், விலையில்லா வேட்டி சேலை தயாரிப்பதற்கான நூலினை நெசவாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.