"தவெகவை ஒரு கட்சியாகவே நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை.." -அமைச்சர் ரகுபதி
திருப்புவனம் இளைஞர் மரணத்தில் தொடர்புடைய யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், இளைஞர் மரணத்தில் தொடர்புடைய யாரையும் அரசு பாதுகாக்காது எனக் கூறினார். இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபடும் நபர்களுக்கு அரசு கருணை காட்டாது எனப் பேசிய அமைச்சர் ரகுபதி, விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை ஒரு கட்சியாகவே தாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை என்றார்.
