"எங்களுக்கு யாருமே இல்ல..அப்பா மட்டும் தான்.."-சபாநாயகரிடம் கதறி அழுத மகள்

x

"எங்க அப்பா தான் உடல மீட்டு கொடுங்க" - சபாநாயகரிடம் கதறி அழுத மகள்

மத்திய பிரதேசத்தில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த தனது தந்தையின் உடலை மீட்டு தரும்படி சபாநாயகர் அப்பாவுவிடம் கண்ணீர் மல்க மகள் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர். அதில், நெல்லையை சேர்ந்த மாசானமுத்து வறுமையின் காரணமாக மும்பைக்கு வேலை சென்றதாகவும், தமிழை தவிர்த்து வேறு மொழி தெரியாததால், தொடர்ந்து பணிபுரிய முடியாமல், சென்னை திரும்ப முயன்று தவறுதலாக வேறு ரயிலில் ஏறியதாகவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மறுநாள் அவரை, மத்திய பிரதேசத்திலுள்ள கஞ்ச் பசோடா (Ganj Basoda) ரயில் நிலையத்தில் சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று அடித்து, துன்புறுத்தியதாகவும், இதனால் உயிரிழந்த கூலி தொழிலாளி மாசானமுத்துவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்