`தேவரின் நேரடி வாரிசுகள் நாங்கள் தான்'' - ஆட்சியரிடம் பரபரப்பு மனு
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நேரடி வாரிசுகள் நாங்கள்தான் என, அவரது தந்தை உக்கிர பாண்டி தேவரின் வாரிசுகள் ராமநாதபுரம் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதுதொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தகப்பனார் உக்கிரபாண்டி தேவரின் இரண்டாவது மனைவி நாகம்மாள் என்பவரின் வாரிசுதாரர்கள் 8 பேர், இந்த மனுவை அளித்துள்ள நிலையில், கோயில் உரிமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், தியாகி பென்ஷன் உட்பட அனைத்து உரிமைகளையும் தங்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். தேவர் குருபூஜை விழாவில் சம மரியாதையும், அனைத்து சொத்துக்களையும் தங்களுக்கு சமமான முறையில் பகிர்ந்தளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Next Story
