நாம் தமிழர் கட்சியினர், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழு கடும் எதிர்ப்பு - கூட்டத்தில் சலசலப்பு
மருத்துவ கழிவு ஆலை அமைக்க கடும் எதிர்ப்பு - வாக்குவாதம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, முத்துவயல் கிராமத்தில் பொது உயிரிய கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழுவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தனியார் மண்டபத்தில் நடைபெற்ற பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில், ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலையில், இரு தரப்புக்கும் வாக்குவாதம் எழுந்தது. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் பாதியில் வெளியேறினர்
Next Story
