"சாலை அபராதங்களில் இருந்து தப்பிக்க வழி" - சொல்கிறார் காவலர் சுனில் சந்து

அமல் பட்டதையடுத்து, புதிய அபராத தொகையால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இதற்கு தீர்வு காணும் விதமாக, சுனில் சந்து எனும் காவலர் ஒருவர், ஆலோசனை கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
"சாலை அபராதங்களில் இருந்து தப்பிக்க வழி" - சொல்கிறார் காவலர் சுனில் சந்து
Published on

புதிய மோட்டார் வாகன சட்டப்படி ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதம், மாசுக்கட்டுப்பாடு குறித்த சான்றிதழ் இல்லை என்றால், ரூ.10,000 அபராதம். ஆனால் வெறும் ரூ.100 கொடுத்து இந்த பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம். வண்டிக்கு சம்பந்தமாக அனைத்து ஆவணங்களையும் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்களிடம் காண்பித்து பிரச்சினையிலிருந்து முழுமையாக தப்பிக்கலாம். இப்படி செய்வதால் அதிக நேரம் விரயம் ஆகும் என்றாலும், பெரும் அபராதத் தொகையிலிருந்து தப்பிக்க முடியும் என்று கூறினார், காவலர் சுனில் சந்து.

X

Thanthi TV
www.thanthitv.com