"தூய்மையான குடிநீர் இல்லை - சைக்கிளுக்கு தனிப்பாதை தேவையா?" - நீதிபதிகள் கேள்வி

x

மாநகரங்களில் சைக்கிள்களுக்கு தனிப்பாதை அமைக்க உத்தரவிடக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அனைவருக்கும் வசதியான குடியிருப்புகளை ஏற்படுத்த அரசுகளிடம் நிதி இல்லாதபோது, ஏழைகளுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்காதபோது சைக்கிள்களுக்கு தனிப்பாதை தேவையா என கேள்வி எழுப்பினர். அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், அரசு பள்ளிகள் மூடப்படும் நிலையில், சைக்கிள்களுக்கு தனிப்பாதை தேவையா ?என்பதை சிந்திக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்