குடும்பத்துக்குள் நடந்த பிரச்சனை..தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த அண்ணி - விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்ததாக, அண்ணி மீது கொழுந்தனார் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருத்தாசலம் குட்டகார தெருவில், வெங்கடேசன் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில், இவருக்கும் இவரது அண்ணன் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது அண்ணன் மனைவி மகாலட்சுமி, வீட்டின் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்ததாக, வெங்கடேசன் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, குடிநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com