தற்கொலை முயற்சி - மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மயங்கிய நபர்

தற்கொலை முயற்சி - மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மயங்கிய நபர்
Published on

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தற்கொலை செய்து கொள்வதாக கூறி, 45 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி மயங்கியவரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். காஞ்சிலி கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர், இட தகராறு தொடர்பாக தமது இடத்தை அளவீடு செய்த போது ஒருதலை பட்சமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால் தாம் தற்கொலை செய்யப்போவதாக கூறி மேல்நிலை நீர் தீர்க்கத தொட்டியில் ஏறிய நிலையில், அங்கு மயக்கமடைந்த அவரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com