திறப்பதற்கு முன்பே ஒழுகும் நீர்த்தேக்கத் தொட்டி - பொதுமக்கள் அதிர்ச்சி

x

கள்ளக்குறிச்சி அருகே 30 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி, திறப்பதற்கு முன்பே ஒழுகுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், சோதனைக்காக நீர் நிரப்பியபோது, நீர்த்தேக்கத் தொட்டியைச் சுற்றிலும் தண்ணீர் ஒழுகியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, ஒப்பந்ததாரர் அலட்சியப்போக்குடன் கட்டுமான பணியை மேற்கொண்டதாக கூறி, ஊராட்சி மன்றத் தலைவரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலகி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்