வைகை அணையில் நீர் திறப்பு - ஆபத்தை உணராமல் மக்கள் செய்யும் செயல்

வைகை அணையில் நீர் திறப்பு - ஆபத்தை உணராமல் மக்கள் செய்யும் செயல்
Published on

தொடர் மழையால் வைகை அணை முழுக்கொள்ளளவை எட்டிய நிலையில், அணையில் இருந்து 2 ஆயிரத்து 544 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது... கனமழை காரணமாகவும் மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், யானைக்கல் தரைப்பாலம் அருகே வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது... ஆற்றங்கரையோரம் செல்லூர் செல்லும் சாலை மற்றும் ஆழ்வார்புறத்திலிருந்து ஆரப்பாளையம் செல்லக்கூடிய சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது... காவல்துறையினர் இரும்பு தடுப்புகளை வைத்து கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தி கோரிப்பாளையம் வழியாக ஆரப்பாளையம் செல்லும் வழியில் வாகனங்களை மாற்றி விடுகின்றனர்... இவ்வழியே செல்லும் சிறிய ரக வாகனங்கள் சிக்கிக் கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது... மக்கள் ஆபத்தை உணராமல் பயணித்து வருகின்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com