கே.ஆர்.பி. அணையிலிருந்து நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மூன்று மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,208 கனஅடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பால், 52 அடி முழு உயரம் கொண்ட கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து, அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, விநாடிக்கு 4,000 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்ட மக்களுக்கு நீர்வளத் துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
