``13 நாளுக்கு ஒருமுறை தான் தண்ணி வருது; அதுவும் சாக்கடை கலந்து..’’
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் 13-ஆவது வார்டு பகுதியில் சாக்கடை கலந்த தண்ணீர் வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதிலும், 13 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருவதாக கூறும் அவர்கள், இதைக் குடிப்பதால் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை பேரூராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Next Story
