தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
Published on
தமிழகம் முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் மட்டும் சுமார் 4 ஆயிரத்து 500 தண்ணீர் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. விவசாயக் கிணறுகளில் உரிமையாளர் அனுமதியுடன் தண்ணீர் எடுக்க உரிமம் வழங்க வேண்டும், தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து, உரிமையாளர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்வதை காவல்துறை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்துகின்றனர். தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் காரணமாக, சென்னை உள்ளிட்ட நகரங்களில் மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com