மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு - அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 92 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு - அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்வு
Published on

கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு மழை தீவிரம் அடைந்துள்ளதால், அம்மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் முன்னெச்சரிக்கையாக அதிகபடியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீர் வரத்து 2 லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்த நீர் மேட்டூர் அணையை வந்தடைந்துள்ள நிலையில், அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று இரவு 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 92 புள்ளி 55 அடியாக அதிகரித்துள்ள நிலையில், நீர்வரத்து இதே அளவில் நீடித்தால் மேட்டூர் அணை முழுகொள்ளளவை 40 வது முறையாக எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையிலிருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com