பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Published on
ஈரோடு மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட இந்த அணையில், கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால், நீர் வரத்து குறைந்து வந்தது. இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 459 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 675 கன அடியாக அதிகரித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com