கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 32 ஆயிரத்து 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைப்பு
Published on
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 32 ஆயிரத்து 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று இரு அணைகளில் இருந்து 50 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று நீர் வெளியேற்றம் மேலும் குறைக்கப்பட்டு உள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து 25 ஆயிரத்து 670 கன அடியாக உள்ள நிலையில் வீனாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணைக்கு நீர்வரத்து : 28 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com