துணி துவைக்கும் போது வெடித்து சிதறிய வாஷிங் மெஷின் - மக்களே உஷார்
சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயில், மணிகண்டபுரம் பகுதியில் வசித்து வரும் ராமகிருஷ்ண கோயல் என்பவர் தனது வீட்டிலிருந்த வாஷிங் மெஷினில் துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அப்போது வாஷிங் மெஷின் திடீரென வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்து வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இது குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பாய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் வாஷிங் மெஷின் முழுவதும் எரிந்து தீக்கிரையானது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Next Story
