சென்னையில் வெடித்து சிதறிய வாஷிங்மெஷின் - வெளியான அதிர்ச்சி காரணம்
சென்னையில் வீட்டில் உள்ள வாஷிங் மெஷின் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. கோடம்பாக்கம் சிவன் கோயில் தெற்கு தெரு பகுதியில் வசிக்கும் சாந்தி என்பவர், துணிகளை போட்டு வாஷிங் மெஷினை ஆன் செய்துள்ளார். வாஷிங் மெஷினில் திடீரென தீப்பற்றியதால் அதை அணைக்க தண்ணீர் ஊற்றியபோது, மேலும் பற்றி எரிந்து மின்சார வயர்களில் பரவியது. இதனையடுத்து அனைவரும் வெளியேறிய நிலையில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். 7 வருடமாக பயன்படுத்தி வரும் வாஷிங் மெஷினில் அதிக அளவு துணிகளை போட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
