நர்ஸ்கள் பணியிட மாற்றத்திற்கு லஞ்சமா? - விசாரணைக்கு உத்தரவு

x

செவிலியர்கள் பணியிட மாற்றத்திற்கு லஞ்சம் - விசாரணைக்கு உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் பணியிட மாற்றத்திற்கு லஞ்சம் கேட்பதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்த பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நர்சுகள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவின் இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரகநலப் பணிகள் இயக்குரகத்தில் பணியாற்றும் 3 அதிகாரிகள் மீது இந்த குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்ட பொது சுகாதாரத்துறை, புகார் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை பாயும் என தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்