சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்

x

சிவகங்கை மாவட்டம் அருகே கீழப்பூங்குடி ஊர்க்காவலன் நொண்டிக்கருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் வடத்தால் கட்டப்பட்ட காளையை 25 நிமிடங்களில் 9 வீரர்கள் கொண்ட குழு அடக்க வேண்டும் என விதிமுறை வைக்கப்பட்டது. இதில் சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களை

சேர்ந்த காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். குறித்த நேரத்திற்குள் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், போட்டியின் போது 2 மாடுபிடி வீரர்கள் காயமடைந்த நிலையில் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்