Nellai | எச்சரித்த காதலியின் தந்தை.. யோசிக்காமல் அரிவாளால் வெட்டி கொன்ற காதலன் -நெல்லையில் பயங்கரம்

x

நெல்லை மாவட்டம் வள்ளியூரில், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தந்தையை, காதலன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த அழகன் என்பவரது மகள் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இதனிடையே, அவர் கூலி வேலை செய்யும் சந்துரு என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அழகன், சந்துருவை எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த சந்துரு, காதலியின் தந்தை அழகனை, அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தலைமறைவானார். இதில், படுகாயமடைந்த அழகன் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சந்துருவை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்