தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மக்களுக்கு பறந்த எச்சரிக்கை
தேனி மாவட்டம் வைகை அணையின் பூர்வீக பாசனப்பகுதிகளான ராமநாதபுரம் மாவட்டத்தின் விவசாய தேவைக்காக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வைகை ஆற்றில் கூடுதலான தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்கள், ஆற்றில் இறங்கவும், கடக்கவும் முயற்சிக்க வேண்டாம் என பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
