வேலூரில் கிராம மக்களுக்கு தரை வாடகை விதித்த வக்பு வாரியம்
வேலூர் அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட காட்டுகொல்லை கிராமத்தை சேர்ந்த சுமார் 150 குடும்பங்கள் நான்கு தலைமுறைக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்த இடம் அதே பகுதியில் உள்ள தர்காவிற்கு சொந்தமானது என்றும், தர்காவிற்கு தரை வாடகை செலுத்த வேண்டும் என சையத் அலி சுல்தான் ஷா வக்ஃபு வாரிய முத்தோலி சதாம் தெரிவித்துள்ளார். இது குறித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ள நிலையில், இடம் தர்காவிற்கு சொந்தமானது தான் என அதிகாரிகள் உறுதி செய்தனர் மேலும் இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அமைதி கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Next Story