

உரவிலை உயர்வுக்கு 58 சதவீதம் உயர்த்தப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பட்ஜெட்டில் மானியம் குறைக்கப்பட்டதால் ரசாயன உரம் தாறுமாறாக உயர்வதாக குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, உடனடியாக உரவிலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.