இளைஞரை கத்தியால் குத்திய கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
திருச்சி அருகே இளைஞரை கத்தியால் குத்திய கூலித்தொழிலாளி, போலீஸ் விசாரணைக்கு பயந்து, தற்கொலை செய்து கொண்டார்.
காட்டுப்புத்தூர் சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த பிரவீன், கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் மோகன் என்பவரது வீட்டிற்கு சென்று வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. அப்போது அதே பகுதியில் வசித்து வந்த விஜயகுமாருக்கும், பிரவீனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில் பிரவீன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயகுமாரின் முகத்தில் குத்தி உள்ளார். இதில் விஜயகுமார் படுகாயமடைந்த நிலையில், வீட்டிற்கு சென்ற பிரவீன், போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சென்ற போலீசார், பிரவீன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story