வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்ட விவகாரம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படியே, கோவையிலிருந்து தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்ட விவகாரம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
Published on
தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படியே, கோவையிலிருந்து தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இது வழக்கமான நடவடிக்கையே என கூறிய அவர், தேவை கருதியே தேனிக்கும், ஈரோட்டிற்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டதாக தெரிவித்தார்.மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டால், பயன்படுத்துவதற்காக இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com