தேனியில் ஒரே அட்ரஸில் 93 பேருக்கு வாக்கு? அதிர்ச்சி தந்த `SIR'

x

தேனி மாவட்டம் போடியில் ஒரே வீட்டின் முகவரியில் 93 பேருக்கு வாக்குகள் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் முந்தல் கிராமத்தை சேர்ந்த 93 பேருக்கு ஒரே வீட்டு முகவரி பதிவாகியிருந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கவே எஸ்.ஐ.ஆர். சரிபார்ப்பு அலுவலர்கள், வீட்டு எண்ணுக்கு பதிலாக வார்டு எண் பதிவாகி இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து, படிவம் எட்டை பயன்படுத்தி தவறை திருத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்