Election2026 | வாக்குப்பதிவு சதவீதம்.. தமிழகம் இதுவரை காணாத வரலாறு திருப்பம்
வாக்குப்பதிவு சதவீதம்.. தமிழகம் இதுவரை காணாத வரலாறு திருப்பம் #election2026 #tnelection2026 #assemblyelection #thanthitv தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வாக்குப்பதிவு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது... தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் 85.15% வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்தத் தேர்தலில், மாநிலம் முழுவதும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான 77.80% வாக்குகளே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. ஆனால், தற்போது அந்தச் சாதனையை முறியடித்து, முதன்முறையாக 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தமுள்ள 5.73 கோடி வாக்காளர்களில் 4 கோடியே 87 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர், எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி மற்றும் நடிகர் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட நட்சத்திரத் தொகுதிகளில் வாக்குப்பதிவு 80 சதவீதத்திற்கும் அதிகமாகவே இருந்துள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. தமிழகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் தேர்தல் முடிவுகள் வரும் மே 4 அன்று அறிவிக்கப்பட உள்ளன.
