

திண்டுக்கல் வத்தலக்குண்டு சாலையில் அரசு கல்லூரி மாணவிகள் திடீரென நடனமாடினர். நிலக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி கணினி பிரிவு மாணவிகள் 20க்கும் மேற்பட்டோர் திடீரென வாக்காளர் விழிப்புணர்வு பாடலுக்கு ஏற்றவாறு நடனம் ஆடத் தொடங்கினர். பொதுமக்கள் முன்னிலையில், திடீரென கல்லூரி மாணவிகள் நடனமாடியது பெரும் வரவேற்ப்பை பெற்றது. தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு முயற்சிக்கு கைகொடுத்த அரசு மகளிர் கல்லூரி மாணவிகளை பொதுமக்கள் பாராட்டினர்.