உடல்நலக் குறைவால் சென்னையில் இயக்குநர் விசு காலமானார்

பிரபல திரைப்பட இயக்குநர் விசு உடல்நல குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 74.
உடல்நலக் குறைவால் சென்னையில் இயக்குநர் விசு காலமானார்
Published on
கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்று விசு, இன்று காலமானார். அவரது மறைவுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் , தமாகா தலைவர், ஜி.கே.வாசன், சரத்குமார் ஆகியோர், விசுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடையே விசுவின் உடல் திங்கட்கிழமை மதியம் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com