உடலில் நுழைந்தால் மரணம் நிச்சயம்...குலை நடுங்கவைக்கும் கொடிய நோய்

x

உடலில் நுழைந்தால் மரணம் நிச்சயம்... குலை நடுங்கவைக்கும் கொடிய நோய் - அதிர்ச்சி அளிக்கும் தமிழக பாதிப்பு ரிப்போர்ட்

இந்தியால தெருநாய்களோட தொல்லையால மக்கள் உயிரிழக்கும் நிலை அபாயகரமான கட்டத்தை எட்டியிருக்குன்னு தான் சொல்லனும். வெற்நாய் கடிக்கு ஒன்றரை வயசு குழந்தையும் தப்பறதில்லை 80 வயசு முதியவரும் தப்பரதில்லை. எல்லா மாநிலங்களையுமே தெருநாய்களோட தொல்லை அதிகரிச்சிருக்கரதா சொல்லப்படர நிலையில, தமிழகத்துல என்ன நிலவரம்னு பார்க்கலாம். இன்னிக்கு சட்டமன்றத்துல கூட இந்த விவகாரம் தொடர்பா சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

தமிழ்நாட்ட பொருத்தவரைக்கும் பொதுசுகாதாரத்துறை இது தொடர்பா ஒரு ஆய்வு நடத்தியிருக்காங்க.அதுல வெறிநாய் கடியால ஏற்படும் ரேபிஸ் நோய் பாதிப்பால உயிரிழப்பு ஏற்படறது கடந்த ஓராண்டுல 2 மடங்கு அதிகரிச்சிருக்கரதா தெரியவருது.

குறிப்பா 2024 ல டிசம்பர் ரேபிஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தது 40 பேர்.அந்த 40 பேரும் இறந்திருக்காங்க. 2023 ல 22 பேர் இறந்திருகாங்க. 2022 ல 28 பேரும் அதே போல 2021 ல 19 பேர் இறந்திருக்காங்க. 2020 ல 20 பேர் ரேபிஸ் நோயால இறந்திருகாங்க. இந்த ஆண்டு துவங்கி போன 2.5 மாசத்துல மட்டும் ரேபிஸ் நோயால 4 பேர் உயிரிழந்திருகாங்க.

அதேபோல மாநிலம் முழுமைக்கும் நாய்க்கடியால பாதிக்கப்பட்டவங்க பத்துன எண்ணிக்கை இன்னும் அதிர்ச்சி தரக்கூடியதாகத்தான் இருக்கு. அந்த வகையில 2024 ல 4 லட்சத்து 79 ஆயிரம் பேரு பாதிக்கப்பட்டிருக்காங்க. 2023 ல 4 லட்சத்து 41 ஆயிரத்து 804 பேர் பாதிக்கப்பட்டிருக்காங்க. 2022 பொருத்த வரைக்கும் கடந்த 5 ஆண்டுகள்ள அதிகபட்ச எண்ணிக்கையா 8 லட்சத்து 83 ஆயிரத்து 213 பேர் பாதிப்புக்கு ஆளாகியிருக்காங்க. 2021 ல 8 லட்சத்து 19 ஆயிரத்து 779 பேரும் 2020 ல 7 லட்சத்து 14 ஆயிரத்து 447 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதா சொல்லப்படுது. இதுல இந்த ஆண்டு கடந்த 2.5 மாசங்களுக்காளகவே 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் பாதிப்புக்கு ஆளாகியிருக்காங்கங்கற செய்தி அதிர்ச்சியளிக்குது.

தடுப்பு மருந்துகள் முறையா கிடைக்கறதுனால சிகிச்சை பெறுவோரோட எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரிச்சாலும் தடுப்பூசி போடுறதுல காட்டப்படும் அலட்சியமும் உயிரிழப்புக்கு முக்கிய காரணமா சொல்றாங்க மருத்துவர்கள்.

அதேபோல நாய்களின் ஆரோக்கியமும் முக்கியம்ங்கறதுனால அவைகளுக்கு பாக்டீரியா,வைரஸ் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய பிற நோய்கள்ள இருந்து பாதுகாக்க நாய்களுக்கு முறையாக தடுப்பூசி செலுத்த வேண்டியது அவசியம். இதுலயும் காட்டப்படக்கூடிய அலட்சியம் ரேபிஸ் போன்ற நோய்கள் பரவ காரணம்.

அதே மாதிரி சென்னை எடுத்துக்கிட்டோம்னா 1.8 லட்சத்துக்கும் மேல தெருநாய்கள் இருப்பதா சொல்லப்படுது. அதுல 30% நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டிருப்பதா சொல்லப்படுது. கடந்த ஆண்டு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்த்டை செய்யப்பட்டதா சொல்லக்கூடிய கால்நடை பாரமரிப்புத்துறை இந்த ஆண்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டமிட்டிருப்பதாவும் சொல்லப்படுது. அதுலயும் முக்கியமா கருத்தடைக்கு பின், மீண்டும் அதே இடங்களில் நாய்கள் விடப்படுவதும் ரேபிஸ் அதிகரிக்க காரணமாகுது.

பொதுவா வெறிநாய்கள பிடிச்சு ஊசி செலுத்தி குணமடைஞ்சதுக்கு அப்பரமா மீண்டும் விட்டுவிடனும்ங்கறது தான் சட்டம் சொல்லுதுன்னும் இந்த விஷயத்துல வெறிநாய் கடியால பாதிகப்பட்ட கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கறது ஒரு பக்கம் இருந்தாலும் மக்களும் கால்நடைகளும் பாதிக்காம இருக்க வெறிநாய்கள கட்டுப்படுத்த உச்சநீதிமன்றத்தில சிறப்பு மனு தாக்கல் செஞ்சு உத்தரவு வாங்குன தான் நிரந்தர தீர்வு கிடைக்கும்னு சொல்லப்படுது.


Next Story

மேலும் செய்திகள்