ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் - காவல்துறையினர் நடத்திய சோதனையில் அதிரடி

ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் - காவல்துறையினர் நடத்திய சோதனையில் அதிரடி

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
Published on
விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய குடோன் உரிமையாளர்கள் நவநீதன், அழகர்சாமி, முத்துமுருகன், சுந்தரம் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com