

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மலையடிபட்டி காமராஜர்புரம் பகுதியில் பலசரக்கு வியாபாரி தவமணி என்பவரது வீட்டியில் இருந்த ஒன்றரை லட்சம் மதிப்புள்ள தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அதே பகுதியில் வறுமையில் வாடி வந்த பாண்டியராஜன் என்பரது கையில் திடீரென்று பணப்புழக்கம் அதிகம் இருந்தததால் சந்தேகமடைந்த போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பாண்டியராஜன் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவர் கைது செய்யப்பட்டார்