Virudhunagar | Fire Accident | மளமளவென பற்றி எரிந்த காகித ஆலை - சாம்பலான பலகோடி மதிப்பிலான பொருட்கள்
Virudhunagar | Fire Accident | மளமளவென பற்றி எரிந்த காகித ஆலை - சாம்பலான பலகோடி மதிப்பிலான பொருட்கள்
காகித ஆலையில் தீ விபத்து - பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த சுக்கிரவார்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் காகிதம் மற்றும் அட்டை தயாரிப்பு ஆலையில், காகித உற்பத்திக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த கழிவு மூலப்பொருளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தைவான், துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 50 ஆயிரம் டன் கழிவு மூலப்பொருள் 50 ஏக்கர் பரப்பளவில் குவித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தீ மளமளவென பரவி பெரும் புகைமூட்டத்தை ஏற்படுத்தியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் தனியார் தண்ணீர் லாரிகள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
