Virudhunagar Accident | சிறைக்காவலர் மரணம் - சென்னையில் அதிர்ச்சி

x

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, ஆம்னி பேருந்து லாரி மோதிய விபத்தில் சிறைக் காவலர் உயிரிழந்தார்.

சென்னை மாதவரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு 50 பேருடன் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. சாத்தூர் டோல்கேட் அருகே, முன்னால் சென்ற லாரி மீது மோதியதில் 6 பயணிகள் காயமடைந்தனர். இந்த கோர விபத்தில் புழல் சிறையில் காவலராக பணியாற்றி வந்த விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த லெனின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆம்னி பேருந்து ஓட்டுநர் அபிராம் பாரத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்