``ஓசி டிக்கெட் தான... உங்களுக்கு சீட் கிடையாது''.. பஸ்சில் பெண்களிடம் இளைஞர்கள் அடாவடி - சென்னையை அதிர வைத்த சம்பவம்
சென்னை வடபழனியில் மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பெண்களிடம் தரக்குறைவாக பேசி இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடபழனி அருகே பேருந்து நின்றபோது அதில் ஏறிய இளைஞர்கள், பெண்கள் இருக்கையில் அமர்ந்துள்ளனர். இதனை பேருந்தில் பயணித்த பெண் தட்டிக்கேட்ட நிலையில், ஓசி டிக்கெட்லதான வர்ரீங்க... நாங்க காசு கொடுத்து வரோம் எனக் கூறி இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story
